பழனியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி



அக்டோபர 15ஆம் தேதி பழனி அருகே உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்களது அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், அறிவியலுடன் இணைந்த சூழலை உருவாக்கும் நோக்கில் கண்காட்சி நடத்தப்பட்டது.  அன்றாட அறிவியல், கழிவு பொருட்களிலிருந்து அன்றாடம் பயன்படும் பொருட்களை உருவாக்குதல், சுகாதாரம், உணவு பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண வந்த பெற்றோர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உலக வெப்பமயமாதலின் விளைவுகளை உணர்த்தி அதனை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்டன. கண்காட்சியில் வேளாண்துறை தொடர்பான கருவிகளை  சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய அறிவியல் மன்றத்தின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேசிய அறிவியல் மன்றத்தின் மாநில செயலாளர் ராமமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும்  பள்ளியின்  கல்வி ஆலோசகர். திருமதி.  பிரியங்கா மதி,  அறங்காவலர்  திருமதி. செல்வநாயகி, முதல்வர் திருமதி. வசந்தா,  துணை முதல்வர்கள் திருமதி. ஹேமலதா, திருமதி. விஜயசாரஸ்வதி,  மற்றும் மாணவமாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட ஏராளமானோர் கலப்துகொண்டனர்.